cropped-logo.jpg

பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய செயற்குழு உறுப்பினர் தெரிவும் 20.08.2017

யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய செயற்குழு உறுப்பினர் தெரிவும் 20.08.2017 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.45 மணிக்கு வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெருமளவு பழைய மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதிய செயற்குழு உறுப்பினர் தலைவர் / அதிபர் திரு. த. அம்பலவாணர் உபதலைவர் திரு. கனகசபாபதி கனகேஸ்வரன் செயலாளர் திரு. பாலசிங்கம் செவ்வேள்  உப செயளாளர் திரு. கனகலிங்கம்…

logo

கல்லூரிக்கான விளையாட்டு மைதானக் கொள்வனவுக்கான மாபெரும் நிதி திரட்டல்!

யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கான விளையாட்டு மைதானக் கொள்வனவு. யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானக்காணிக் கொள்வனவுக்கான அவசரமான வேண்டுகோளை பாடசாலைச் சமூகம் புலம்பெயர் பாடசலைச் சமூகத்தினரிடம் அவசரமாக கோரி நிற்கின்றது. பலவருடங்களாக காணி இருந்தும் அதனைக் கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலையில் பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் இடம் பெறாத நிலையில் பாடசாலைச் சமூகம் உரிய காணியினைக் கொள்வனவு செய்வதற்கு தமது அனைத்துலக பாடசாலைச் சமூகத்தினரிடம் வேண்டி நிற்கின்றது….

கால்கோள் விழா – 2017

எமது கல்லுாாியில் கால்கோள் விழா ஆனது 18.01.2017 அன்று புதன்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லுாரி முதல்வர் தலைமையில் கல்லுாரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை விருந்தினராக கனடா பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு.சி.சுந்தரலிங்கம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

logo

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – 2016

விஞ்ஞானப் பிரிவு 1.தி.கிருசாந்தி – பி,2சி 2.சி.இனோஜா – 3சி கணிதப் பிரிவு 1.கு.பிரியங்கன் – ஏ,பி,சி வர்த்தகப் பிரிவு 1.ஜெ.கஜவதனா – 2ஏ,பி 2.மா.தெவனிகா – 2ஏ,பி 3.ந.லக்சன் – 3பி 4.க.ஜெனகன் – 3பி கலைப் பிரிவு 1.செ.தனுசிகா – ஏ,பி,சி 2.பா.நிர்மலா – ஏ,2பி 3.யோ.அபிரா – ஏ,பி,சி 4.ம.நிறோஜினி – ஏ,2பி 5.அ.அனித்தா – 2பி,சி 6.ம.சதீஸ் – ஏ,பி,சி 7.ப.துவிதா – 2பி,சி 8.சி.ஜீவாசினி – ஏ,2சி 9.ப.துஸ்யந்தி –…

o5

ஒளி விழா நிகழ்வு – 2016

எமது கல்லூரியின் ஒளி விழா நிகழ்வுகள் 09.11.2016 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கிறீஸ்தவ மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.  நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.க.அருந்தவபாலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் சமய வழிபாடும் கலை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.  

la2

தேசிய வாசிப்பு மாத (ஒக்டோபர்) இறுதிநாள் நிகழ்வுகள்-2016

தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் 28.10.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லுாரி முதல்வர் தலைமையில் கல்லுாரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சமூகநல உத்தியோகத்தர் திரு.வே.சிவராசா அவர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தார். தொடர்ந்து மாணவர்களின் கலை  நிகழ்வுகள் இடம்பெற்றன.  

l2

புத்தகக் கண்காட்சி – 2016

எமது கல்லுாரியில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியானது 20.10.2016 அன்று காலை 8.30 மணிக்கு கல்லுாரியின் நுாலகத்தில் இடம்பெற்றது. இதற்கு பிரதம விருந்தினராக கல்லுாரியின் முதல்வர் திரு.த.அம்பலவாணர் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களும் பார்வையிட்டனர்.